--- --:--:-- --

காணாமல் போன நபர் சுறாவின் வயிற்றில் இருந்து மீட்பு..!

9

அர்ஜென்டினாவில் காணாமல் போன மனிதர் சுறாவின் வயிற்றுக்குள் இருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அர்ஜென்டினாவை சேர்ந்த டி.ஆர்.கோ என்ற 32 வயது இளைஞரை கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி முதல் காணவில்லை.

 

விசாரணையில் அன்று அவர் கடற்கரையோரம் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மீனவர்களை பிடித்த விசாரித்த பொழுது இருசக்கர வாகனம் வந்த இடத்திற்கு அருகே மூன்று சுறாக்கள் பிடிபட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

 

இதனையடுத்து சுறாவை சுத்தம் செய்த பொழுது சுறாவின் வயிற்றுக்குள் அவர் உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது. அவரின் டாட்டூவை வைத்து அது அவரின் உடல் தான் என அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டிய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon