மூன்று வருடங்களுக்குப் பிறகு முக கவசத்திலிருந்து நிம்மதியடையும் மக்கள்..!
ஹாங்காங் நாட்டில் 945 நாட்களுக்குப் பிறகு முக கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாட்டு தளர்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பரவி முக கவசம் அணிவதை கட்டாயமாக்கின. அந்த வகையில் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியது.
தற்பொழுது கொரோனா நீங்கிய நிலையில் பல நாடுகள் முழுக்கவசம் அணிவதை கட்டாயமாகவில்லை. ஹாங்காங் நாட்டிலும் 945 நாட்களுக்கு பின்னர் முக கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
நாட்டின் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிக நாட்களுக்குப் பிறகு ஹாங்காங்கில் முககவசம் கட்டாயம் என்று கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





