மத்திய அமைச்சர் எல்.முருகன் இலங்கை பயணம்..!
இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை மதிய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைக்க உள்ளார். அரசு முறை பயணமாக இன்று இலங்கை செல்லும் மத்திய இணை அமைச்சர் முருகன் வரும் 12ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
குறிப்பாக யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை திறந்து வைக்க உள்ளார். இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அந்த மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். யாழ்ப்பாணம் கலாச்சாரம் மையத்தின் அருங்காட்சியகம் 600 பேர் வரை அமரக்கூடிய நவீன திரையரங்கு உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





