--- --:--:-- --

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மரணத்தில் திடீரென வெளிவந்த உண்மை..!

5

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை வழக்கின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட 12 பேரில் 11 பேர் பொய்யான தகவல்களை அளித்தது தெரிய வந்துள்ளது.

 

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை பத்தாண்டுகளாக பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு நாற்பது பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திண்டுக்கலில் 12 பேரிடம் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அறிவியல் சோதனை கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தற்பொழுது இந்த உண்மை கண்டறியும் சோதனை குறித்து விபரங்கள் வெளியாகியுள்ளது.

 

அதில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட 12 பேரில் 11 பேர் பொய்யான தகவல்களை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon