முன் விரோதம் காரணமாக கொடூரமாக கொலை செய்த கும்பல்..!
புதுச்சேரியில் முன் விரோதத்தில் ரவுடியை கொலை செய்ததாக ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். ரவுடி பிரவினை அந்த பகுதியில் உள்ள தனியார் மதுபான கடை அருகே ஒரு கும்பல் நேற்று முன்தினம் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ், ஜான், ஷேக் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.
பிரவீன் அவ்வப்போது ஆகாஷை தாக்கி வந்ததால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளதாகவும் இதனால் நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை ஆகாஷ் கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே பிரவீனை கொலை செய்ததற்காக மோட்டார் சைக்கிளில் சென்றதும் பின்னர் கையில் ஆயுதங்களுடன் சிலர் ஓடும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





