--- --:--:-- --

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா.?

3

துருக்கி, சிரியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி, சிரியா நாடுகளில் ரிக்டர் அளவுகோலில் 7.8 என பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

 

தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள் காண்போரை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவது முதன்முறையல்ல. 1939 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

 

அதன் பிறகு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டு இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

துருக்கியில் உள்ள பழமையான கட்டிடங்கள் தரமற்ற பொருட்களால் ஆனது எனவும் கட்டுமான பணிகளில் பாதுகாப்பு தரவுகள் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon