அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிடும் பெண்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் தனது அரசு பணியை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் களத்தில் குதித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சித்ரா.
இவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசு பணியாளர் தனது தூய்மை பணியாளர் வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து நேற்று தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர் தூய்மை பணியாளர்களின் கஷ்டத்தை போக்குபவராக இடை தேர்தலில் வெற்றி பெற்று தனது தொகுதியில் கையால் மலம் அள்ளுவதை ஒழிக்க இயந்திரங்களை கொண்டு வருவேன் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





