--- --:--:-- --

ஓடி விளையாடிய மாணவன் திடீரென மயக்கம் அடைந்து மரணம்..!

7

நாகையில் பள்ளியில் விளையாடி கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய காரைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா.

 

இவருடைய மகன் கவிப்ரியன். எட்டாம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிக்கு சென்று வந்த கவிப்பிரியன் மாணவர்களுடன் சேர்ந்து பள்ளி மைதானத்தை சுற்றியவாறு ஓடி விளையாடிக் கொண்டிருந்தான்.

 

அப்பொழுது மூன்றாவது சுற்று ஓடி வந்த பொழுது கவி பிரியன் திடீரென என மயக்கமடைந்து கீழே விழுந்தான். உடனடியாக ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவனை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

 

இதனிடையே மேல் சிகிச்சைக்காக மாணவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon