--- --:--:-- --

மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இன்று தொடக்கம்..!

9

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

 

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதத்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

 

ஒரு லட்சத்து 16,342 மாணவிகள் பயனடைந்துள்ளதாகவும் இடைநிற்றலில் இருந்து மீண்டு 12,000 மாணவிகள் உயர்கல்விகள் சேர்ந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை அடுத்த பட்டாபிராமன் இந்து கல்லூரியில் இன்று நடைபெற உள்ள விழாவில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் ஒரு லட்சத்து 4,347 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

 

பெண் குழந்தைகளின் இடைநிற்றலை குறைத்தல், பாலியல் சமத்துவத்தை ஏற்படுத்துதல், பெண்களின் சமூகம் மற்றும் புறநகர் பாதிப்பை உறுதி செய்தல் போன்றவற்றுக்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் புது இயக்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon