பாஜக உறுப்பினர்கள் பேச்சே வெட்கக்கேடானது – கனிமொழி
பெண்களுடன் உடன் கட்டை ஏறுவது பெருமை கூறியது என்ற வகையில் நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் பேசியதற்கு காங்கிரஸ், திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநில பாஜக உறுப்பினர் ஜோஷி, பத்மாவதி தீக்குளித்து எரிந்தது பெருமையானது என தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை கண்டித்து அமலில் ஈடுபட்டதால் ஜோஷி தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதை தொடர்ந்து பேசிய கனிமொழி பெண்களுடன் கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பாஜக உறுப்பினர் பெருமையாக பேசுவது வெட்கப்பட வைக்கும் செயல் என குறிப்பிட்டார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X





