தண்ணீர் இல்லாத நூறு அடி ஆழக்கிணற்றில் மூன்று குழந்தைகளோடு குதித்த தம்பதி..!
தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறில் மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தம்பதி குதித்த நிலையில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன. பொட்டிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமராஜ் – வீரமணி தம்பதியினர் கேரளாவில் ஏலக்காய் தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்தனர்.
இவர்களின் ஒன்றரை வயது குழந்தையான ஈஷாஸ்ரீ க்கு காது குத்தும் விழாவிற்காக சொந்த ஊருக்கு வந்திருந்த பொழுது தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று குழந்தைகளையும் தண்ணீர் இல்லாத சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தள்ளி விட்டுவிட்டு தம்பதியரும் குதித்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்கள் இருந்த ஐந்து பேரையும் மீட்கும் இடையில் ஈடுபட்டனர்.
இதில் ஈஷா ஸ்ரீ சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மாற்ற நான்கு பேரையும் படுகாயத்துடன் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஜீவிதா என்ற மற்றொரு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் தம்பதி மற்றும் மகன் ராஜபாண்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





