நிர்மலா சீதாராமனை பாராட்டிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை..!
தொலைநோக்கு பார்வையுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டியுள்ளார். தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது தொலைநோக்கு பார்வையுடன் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தார் மற்றும் புதுச்சேரி மாநில வருங்கால முன்னேற்றங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





