அதிக ஈரப்பத நெல் கொள்முதல் – முதல்வர் இன்று ஆலோசனை..!
டெல்டா மாவட்டங்களில் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் காலை ஆலோசனை நடத்துகிறார்.
முதல்வர் உடனான ஆலோசனையை அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே. செல்வம் பங்கேற்க உள்ளனர். தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர்கள் நேற்று ஆய்வு செய்திருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





