ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல நடிகருடன் ஒர்கவுட்!

ஸ்வர்யா ரஜினி நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த வருட தொடக்கத்தில் திடீரென விவாகரத்தை அறிவித்து ஷாக் கொடுத்தனர். அதற்கு பிறகு படங்களில் இருவருமே பிஸியாகிவிட்ட நிலையில் தங்கள் மகன்கள் உடன் மட்டும் அவ்வப்போது போட்டோ வெளியிட்டு வருகிறார்கள்.

 

ஐஸ்வர்யா ரஜனிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்க இருக்கிறார். அதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினியும் அதில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார்.

 

ஐஸ்வர்யா சமீப காலமாக உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் போன்ற விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் நடிகர் பிரபுதேவா உடன் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். ”பிரபுதேவா அண்ணா ரப்பர் மனிதன்” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.