விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?

சுரன், துணிவு படங்கள் மூலம் தமிழக மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியிருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்தில் அதிக படங்கள் நடித்துள்ள இவர் மோஹவரம் என்ற சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி பின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மஞ்சு வாரியர் மலையாளத்தில் டாப் நாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். சினிமாவை தாண்டி மஞ்சு வாரியர் ஒரு குச்சுப்புடி நடன கலைஞராவார், நிறைய மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் பங்குபெற்றுள்ளார்.

 

1998ம் ஆண்டு தன்னுடன் சில படங்களிலும் நடித்த திலீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். பின் சில காரணங்களால் இருவரும் 2014ம் ஆண்டு விவாகரத்திற்கு வழக்கு தொடர்ந்து 2015ல் பிரிந்தார்கள்.