அந்த மோசமான நாட்கள்.. அதெல்லாம் மறக்க முடியாது – சமந்தா

மிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியானது.

 

இதைதொடர்ந்து இவர் நடிப்பில் புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 17 -ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சமீபத்தில் சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதில் இருந்து மீண்டு வரும் இவர் தற்போது போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் அவர் ” நீ விரைவில் குணம் அடைவாய் என்று நான் உறுதியாக கூறுகிறேன். இந்த 7 – 8 மாதங்களில் நீ பல மோசமான நாட்களை பார்த்துவிட்டாய், அதில் இருந்து மீண்டு வந்துள்ளாய். அதை நீ மறக்க கூடாது. இந்த மோசமான நாட்களை நீ நினைவில் வைத்துக்கொள். நீ உன்னை நினைத்து பெருமை படு. நீ ஒரு வலிமையானவள் ” என்று தனக்குத்தானே அறிவுரை கூறியுள்ளார் சமந்தா.

 

இவர் நாக சைதன்யாவை 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.