வீலிங் சாகசம் செய்த இளைஞர்கள்..!

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்த காட்சி வைரலானதை தொடர்ந்து வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

திருச்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த வாகனம் வேப்புகானா பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

 

அவரிடம் போலீசார் விசாரித்த பொழுது அவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ததும் அந்த இருசக்கர வாகனத்தை தற்பொழுது முத்தரசநல்லூரை சேர்ந்த ஒருவர் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

 

இதையடுத்து அந்த இரு சக்கர வாகனத்தை வைத்திருந்தவர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவருக்கு 12,000 ருபாய் விதித்தனர்.