நடிகை கல்யாணி வீட்டில் விசேஷம்..!

ளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தமிழில் ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமானார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

 

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பிசியான நடிகையாக வளம் வரும் கல்யாணி பிரியதர்ஷன், பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பதை நாம் அறிவோம்.

 

இந்தியளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பிரியதர்ஷன். இவர் தமிழும் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தையும், நவரசா ஆந்தாலஜி சீரிஸில் இடம்பெற்ற ஒரு பகுதியையும் தமிழில் இயக்கியிருந்தார்.

 

இயக்குனர் பிரியதர்ஷன் கடந்த 1990ம் ஆண்டு நடிகை லிஸ்சி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சித்தார்த் மற்றும் கல்யாணி என இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு விவாகரத்து பெற்றுகொண்டு இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், பிரியதர்ஷனின் மகன் சித்தார்த்துக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன.