பள்ளி மாணவியை காதலித்து ஏமாற்றிய பாஜக பிரமுகர்..!

ள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய பாஜக பிரமுகரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். திருச்சி மலைக்கோட்டையை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் வினோத் instagram மூலம் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவியிடம் பழகியுள்ளார்.

 

திருமணம் செய்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் அடிக்கடி தனியாக சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வினோத் பள்ளி மாணவியிடம் இருந்து விலகியுள்ளார்.

 

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக பிரமுகர் வினோத்தை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட வினோத்தை கடந்த மாதமே கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக திருச்சி மாவட்ட பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். வினோத்திற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.