--- --:--:-- --

இதை எனது வீடு போல உணர்கிறேன் என ராகுல் காந்தி நெகிழ்ச்சி பேச்சு..!

10

இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீருக்குள் நுழைந்துள்ள நிலையில் எனது வீட்டிற்கு திரும்புவதை போல் உணர்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பல மாநிலங்களைக் கடந்து நேற்று காஷ்மீருக்குள் நுழைந்தது.

 

யாத்திரை காஷ்மீர் வந்தடைந்த நிலையில் ராகுல் காந்தி உடன் ஏராளமானோர் தீப்பந்தங்களை ஏந்திய படி நடை பயணத்தில் பங்கேற்றனர். காஷ்மீரில் ராகுல் பாத யாத்திரையில் பருக் அப்துல்லா பங்கேற்றார். ராகுல் காந்தியை வரவேற்று கலந்துரையாடினார்.

 

இதையடுத்து நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி காஷ்மீரில் நுழைந்தது எனது வீட்டிற்குள் நுழைவதை போல் உள்ளதாக தெரிவித்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மக்களிடம் வெறுப்பை பரப்பி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon