வரும் 10ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை நடைபெற உள்ள கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் வரும் 9ம் தேதி தொடங்க உள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்ட நிர்வாகிகள் பிரச்சனைகள் குறித்து முன்வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





