ரிஷப் பந்த் விபத்து – அவசரமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றம்..!
சாலை விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பந்த் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் சொகுசு காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோது விபத்திற்கு உள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ரிஷபந்த்தை அங்கிருந்தவர்கள் மீட்டனர். இதில் சில வினாடிகளிலேயே கார் தீ பிடித்து எரிந்தது.
இதில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





