கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு..!
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற நபருக்கு கருப்பு பூஞ்சை கண்டறியப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 55 வயதுடைய நபர் கடந்த 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க வந்த நிலையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் லேசர் டிஸ்யூப் பரிசோதனை செய்வதற்காக மாத்திரைகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார்.
அந்த ஆய்வின் முடிவில் அவருக்கு சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காசியாபாத் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை எடுத்து அந்த நபருக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சையுடன் சேர்த்து பூஞ்ஜை பாதிப்புக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





