--- --:--:-- --

வங்க கடலில் இருந்து குமரி கடலுக்கு சென்ற காற்றழுத்த தாழ்வு பகுதி..!

1

வங்கக்கடலில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்ததால் கடலூர், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

 

கடலூர் மாவட்டம் விசைப்படகு மீனவர்கள் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் கடலுக்கு சென்றனர். கங்கை, கடலூர், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக குமரி கடல் பகுதிக்கு நகர்ந்தது.

 

இதனால் மீனவர்களுக்கான எச்சரிக்கையை விலக்கிக் கொள்ளப்பட்டதால் கரையோர விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

 

அதே நேரத்தில் கடலில் காற்றின் வேகம் முழுமையாக குறையாததால் வைபர் படகு மீனவர்களும் நாட்டுப்புற மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon