--- --:--:-- --

கரூர் தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி..!

2

கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவராக இருந்த முத்துக்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

 

தேர்தல் நடந்த பொழுது அதிமுக கவுன்சிலர் திருவிக கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கவுன்சிலர் கடத்தப்பட்டதால் தேர்தலை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற மக்களவையில் முறையிடப்பட்டது.

 

அதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்ட நிலையில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி திமுக வேட்பாளர் தேன்மொழி ஏழு வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் ரமேஷ் நான்கு வாக்குகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon