ஆற்றில் தலை குப்புற கவிழ்ந்த ஆட்டோ..!
நெல்லையில் தாமிர பரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மலையப்பன் நேற்று வண்ணாரப்பேட்டை சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது உடையார்பட்டி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வேகமாக வந்த ஆம்னி பேருந்து மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மேம்பாலத்திலிருந்து தலைக்குப்புற கீழே விழுந்துள்ளது.
இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் சேதம் அடைந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் மலையப்பன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர் .இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலு விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





