ரயில் நிலையத்தில் வாங்கிய உணவில் கிடந்த புழு!
ரயில் நிலையத்தில் வாங்கிய உணவில் புழு இருப்பதாக கூறி பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோவால் பரபரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து கிளம்பிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மானா மதுரையை சேர்ந்த ராஜவேல் என்பவர் பயணம் செய்தார்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற பொழுது அங்கு விற்பனை செய்பவரிடமிருந்து வெஜிடபிள் பிரியாணி பொட்டலம் ஒன்றை அவர் வாங்கியதாக தெரிகிறது. உணவை பிரித்து சாப்பிடும் பொழுது அதில் புழு ஒன்று கிடக்கவே அதிர்ந்து போனவர்.
இதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார். ரயில் பயணத்தின் பொழுது பயணிகளுக்கு உரிய பாதுகாப்பான உணவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





