--- --:--:-- --

மாணவ, மாணவிகளை ஆபாசமாக பேசிய ஆசிரியை..!

8

திண்டுக்கல் அருகே மாணவ, மாணவிகளை ஆபாசமாக பேசித் தாக்கிய ஆசிரியையை பணி நீக்கம் செய்ய கோரி பெற்றோர் பள்ளியை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 155 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

 

இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுத்து வரும் இடைநிலை ஆசிரியை ஜெயந்தி என்பவர் மாணவ, மாணவிகளை ஆபாசமாக பேசி தாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

 

இதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணி நீக்கம் செய்ய கோரி பெற்றோர் பள்ளிக்கு பூட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon