அதிவேகமாக ஓடிய ரயில் தண்டவாளத்தில் சிக்கிய தாய் மற்றும் மகன்..!
ரயில் பயணத்தின் பொழுது எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் கரணம் தப்பினால் மரணம் என்ற வாக்கியம் எடுத்துக்காட்டாகி வருகிறது.
தாய் தனது மகனுடன் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது சரக்கு ரயில் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இதை பார்த்த இருவரும் ரயில் தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியை பயன்படுத்தி உட்கார்ந்து கொண்டனர்.
நூலிழையில் இருவரும் தப்பி செல்கின்றனர். ரயில் பயணத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கமிக்க சம்பவம் கர்நாடகா மாநில ரயில் நிலையத்தில் அரங்கேறியுள்ளது.
அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடிக்கவே தற்பொழுது இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





