திருமணம் ஆகி 13வது நாளில் பெண் தற்கொலை..!
வட சென்னையில் திருமணம் ஆகி 13 நாட்களே ஆன பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை தண்டையார்பேட்டை சேர்ந்தவர் ரேகா. இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் சென்னை டிநகரை சேர்ந்த ராஜசேகரன் என்பவருக்கும் கடந்த பதினான்காம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் ரேகா கடந்த ஒரு வாரமாக தனது தந்தை வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தந்தையின் வீட்டிலேயே ரேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





