முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த மூன்று திட்டங்கள்..!
கங்கை கொண்ட சோழபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் பெரம்பலூரிலும் அரியலூரிலும் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரியலூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 54 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இரு மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரத்தி 621 பயணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர் தமிழகத்தின் வரலாற்று கருவூலமாக அரியலூர் நகரம் திகழ்கிறது.
இயற்கை வளங்கள், கனிம வளங்கள் நிறைந்த மாவட்டங்களாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் திகழ்கின்றன எனவும் அவர் கூறினார். இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





