--- --:--:-- --

ஆதாருடன் மின் இணைப்பை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்..!

9

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை தமிழக முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூறி தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

 

இதன்படி மின் நுகர்வோர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது. இதற்கிடையே ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின்வாரியம் உத்தரவிட்டது.

 

மின் நுகர்வோர் அனைவரும் ஒரே நேரத்தில் மின்வாரிய இணைய தளம் சென்று தங்களது மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய இணைய தளத்தின் சர்வர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடங்கியது.

 

ஆதார் எண்ணை இணைக்க முடியாமலும் பின் கட்டணத்தை செலுத்த முடியாமலும் நுகர்வோர் அவதிக்குள்ளாக்கினார். இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதன்படி இன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளனர். பணி நாட்களைத் தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon