கயல் சீரியலில் இருந்து வெளியேறிய டாப் நடிகர்..!

ன் தொலைக்காட்சியில் ஏன் தமிழ் சீரியல்களில் TRPயில் டாப்பில் இருக்கும் தொடர் என்றால் அது கயல் தான். சைத்ரா ரெட்டி நாயகியாக நடிக்க, சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார். அப்பா இல்லாத குடும்பத்தை மூத்த மகளான கயல் மொத்த பொறுப்பையும் ஏற்று அவர்களை பார்த்து வருகிறாள்.

 

பொறுப்பே இல்லாத அண்ணன், விளையாட்டு தனமாக இருக்கும் தம்பி, இரண்டு தங்கைகள் என கதை விறுவிறுப்பு குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

 

இந்த தொடரில் கமல் தம்பியாக நடித்துவந்த அவினாஷ் சில காரணங்களால் தொடரில் இருந்து விலக அவருக்கு பதில் ஹரி என்பவர் அன்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவர் நடிக்க தொடங்கி சில எபிசோடே ஓடிய நிலையில் தற்போது ஹரியும் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுகிறாராம். இதனால் அன்பு கதாபாத்திரத்தில் ஜீவா என்ற புதிய நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.