காலில் விழுந்த ரசிகர்கள் ! கோபத்தில் நிர்வாகியை அழைத்து எச்சரித்த தளபதி விஜய்..!

மிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய், இவரின் நடிப்பில் அடுத்து வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

 

இந்நிலையில் நேற்று விஜய் தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளுடன் பனையூரில் மீட்டிங் நடத்தியிருக்கிறார். அப்போது அவரை காண ஏகபட்ட ரசிகர்கள் சென்றனர், அதன் பதிவுகளும் இணையத்தில் வைரலாகின.

 

இதற்கிடையே விஜய் ரசிகர் மன்றத்தின் மாநில நிர்வாகியான பூஸ்ஸி ஆனந்தின் காலில் ரசிகர்கள் சிலர் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ இணையத்தில் பரவின.

 

மேலும் தற்போது விஜய் நிர்வாகி பூஸ்ஸி ஆனந்தை அழைத்து இதுபோன்ற நிகழ்வு நடைபெற கூடாது என எச்சரித்தாகவும், மற்ற நிர்வாகிகளுக்கு இப்படி காலில் எல்லாம் விழ கூடாது, மக்கள் பணியை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள் என விஜய் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.