--- --:--:-- --

whatsapp இன் இந்திய தலைவர் ராஜினாமா..!

4

whatsapp நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி மற்றும் மெட்டா நிறுவனத்தின் பொதுக்குழு இயக்குனர் ராஜினாமா செய்துள்ளனர். whatsapp, facebook, instagram தாய் நிறுவனமான மெட்டா கடந்த வாரம் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ததாக அறிவித்தது.

 

இந்நிலையில் whatsapp நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் பதவியை ராஜினாமா செய்ததாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல மெட்டாவின் இந்தியாவிற்கான பொது குழுவின் இயக்குனர் பதவி விலகியுள்ளார்.

 

மெட்டா நிறுவன பணிநீக்கத்தின் வீழ்ச்சியாக இந்திய தலைமை அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி அஜித் மோகன் பதவி விலகி இருந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon