வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது..!
வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வங்க கடல் பகுதிகளில் சூறாவளி வீச கூடும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை நடைபெறும் என சென்னையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





