--- --:--:-- --

பயிர் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க முதலமைச்சர் வலியுறுத்தல்..!

1

டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர் காப்பீடுக்கான கால வரம்பை நீட்டிக்குமாறு மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

வடகிழக்கு பருவ மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததை அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையினால் தொடர்ச்சியான விடுமுறை, இடைவிடாது மழை உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட மின்தடையால் பயிர் காப்பீடு செய்வதில் இடையூறு ஏற்பட்டதாகவும் இதனால் நிர்ணயிக்கப்பட்ட காலவாரம் என நீட்டிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

இதனால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, கரூர், சேலம், திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பயிரிடப்படும். சாகுபடிக்காக பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுப்பினை ஒரு 30-ம் தேதி வரை நீடிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon