மேற்கூரை இடிந்து விழுந்ததில் மணப்பெண்ணின் தாய் உட்பட 10 பேர் படுகாயம்..!
ஆம்பூரில் தனியார் திருமண மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மணப்பெண்ணின் தாய் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இருவரின் திருமணம் நடைபெற்றது.
அப்பொழுது மண்டபத்தின் மேற்கூறையில் அமைக்கப்பட்டிருந்த ஃபால் சீலிங் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதில் மணப்பெண்ணின் தாய் ஷபானா உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





