--- --:--:-- --

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை..!

2

திருப்பத்தூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர் ராஜா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

சிறுமி அழுதவாறு வீட்டிற்கு வந்த நிலையில் பெற்றோர் விசாரித்த பொழுது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பகுதி மக்கள் ராஜாவின் மனைவியை வெளியே அனுப்பிவிட்டு வீட்டிற்கு பூட்டு போட்டுள்ளனர்.

 

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த ராஜா தன் சொந்த மகளையே பாலியல் துன்புறுத்தல் செய்து கடந்த 2021ம் ஆண்டு சிறைக்கு சென்றார் என தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon