--- --:--:-- --

சிறுமியைத் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை..!

8

புதுக்கோட்டையில் சிறுமியைத் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த நபர் உட்பட 3 பேர் கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றுள்ளனர்.

 

அருகில் உள்ள தோட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்ததால் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனையடுத்து அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரண்டு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon