மீனவர் மீது துப்பாக்கிச் சூடு..!
மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் கடற்படை வீரர்கள் மீது தமிழக கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். கோடியக்கரை அருகே மீன் பிடித்து விட்டு திரும்பும்போது மீனவர்கள் மீது கடற்படையால் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
படகை நிறுத்த மீனவர்களை பலமுறை எச்சரித்தும் அவர்கள் நிற்காமல் சென்றதால் துப்பாக்கியால் சுட்டதாக கடற்படையினர் விளக்கமளித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் என நினைத்து நிறுத்தாமல் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





