--- --:--:-- --

தீபாவளியன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

2

மிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தீபாவளி நாளான 24ஆம் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon