--- --:--:-- --

புதிய கட்டடங்களை காணொளி மூலமாக திறந்து வைத்த முதலமைச்சர்..!

1

துரை மருத்துவக் கல்லூரியில் நாற்பத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை காணொளி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் பயன்படும் வகையில் 2 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் விடுதிக் கட்டடங்கள், 20 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் மாணவர் விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

 

மேலும் 8 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நூலகமும் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கட்டடங்களை மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்காக முதலமைச்சரின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon