--- --:--:-- --

தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு..!

7

மதுரை கூடல் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சி இரண்டாவது வார்டுக்குட்பட்ட கூடல்நகர் சொக்கலிங்கம் பகுதியில் பாதாள பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது.

 

இந்த பள்ளம் சரி செய்யப்படாததால் மழைநீர் தேங்கியது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் அந்த வழியாக நடந்து வந்து பாதாள சாக்கடை குழியில் விழுந்தார்.

 

நீண்ட நேரமாக அவர் பிடியில் இருந்து எழுந்து வர முயற்சித்தும் அவரை காப்பாற்ற யாரும் வராததால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon