அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேர்தல் : வாக்குப்பதிவு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூருக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ள நிலையில் அந்த கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள மல்லிகார்ஜுன கார்கே – சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குச்சீட்டு மூலம் காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க அந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் முன்னாள் மாநில தலைவர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர்.
நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரத்து 300 பேர் வாக்களிக்க உள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 711 பேர் வாக்களிக்க உள்ளனர். அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் 4 வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளும் கொண்டுவரப்பட்டன. கட்சியின் மாநில தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக வாக்காளர்களுக்கு கியூ ஆர் கோட் உடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




