--- --:--:-- --

இன்று அதிமுக அலுவலகத்தில் கட்சியின் 51வது ஆண்டு தொடக்க விழா..!

1

ட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் பழனிசாமி தரப்பினர் இறுதி முடிவு எடுக்காத நிலையில் பன்னீர்செல்வம் அணியினர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அதிமுக பழனிசாமி தரப்பினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

 

ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இன்று அதிமுக அலுவலகத்தில் கட்சியின் 51வது ஆண்டு தொடக்க விழாவிற்கு பிறகு சட்டப்பேரவையில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

 

அதே சமயம் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon