விமானத்தில் இருந்து திடீரென புகை வந்ததால் தரையிறக்கம்..!
ஹைதராபாத் விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கோவாவில் இருந்து 86 பயணிகளுடன் நேற்றிரவு ஹைதராபாத் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்து புகை வந்ததையடுத்து ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அவசர வழி மூலம் விமானத்தில் இருந்து வெளியேறிய நிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





