--- --:--:-- --

சக மாணவன் கொடுத்த குளிர்பானத்தை குடித்த சிறுவனுக்கு கிட்னி செயலிழப்பு..!

7

கன்னியாகுமரி அருகே ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவனின் இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது 11 வயது மகன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்த சிறுவனுக்கு அந்த பள்ளியில் படித்த மற்றொரு மாணவர் குளிர்பானம் கொடுத்ததாக தெரிகிறது. அந்த குளிர்பானத்தை குடித்த சிறுவனுக்கு சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுவனுக்கு வாயில் புண் ஏற்பட்டதால் மேல்சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான்.

 

அப்பொழுது அங்குள்ள மருத்துவர்கள் சோதனை செய்ததில் மாணவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon