ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
மன்னார்குடி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுகந்தி. இவர் அருகே உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நிலை தடுமாறி ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு வலிப்பு நோய் இருப்பதையும் அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வலிப்பு ஏற்பட்டு ஆற்றில் மூழ்கி இருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





