எலிசபெத்தின் சவப்பெட்டியை நோக்கி திடீரென ஓடிய நபரால் பரபரப்பு..!
ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டியை நோக்கி திடீரென ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் உடலுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த பொழுது வரிசையில் இருந்து விலகிய அந்த நபர் திடீரென சவப்பெட்டி வைத்திருந்த மேஜை மீது ஏற முயன்றார்.
உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





